பிரபல சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள்: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள்: குவியும் வாழ்த்துக்கள்!

பிரபல சீரியல் நடிகை தனது கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ’பிரியமானவள்’ மற்றும் ’கண்மணி’ ஆகிய தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை அபிநவ்யா. இவர் ’பூமி’ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சீரியல் நடிகர் தீபக்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அபிநவ்யா சமீபத்தில் கர்ப்பமான நிலையில் கர்ப்பமான போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்

மேலும் நேற்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் தற்போது கணவருடன் கூடிய கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்ளை பதிவு செய்து உள்ளார். இதனையடுத்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும், அவர் தாயானதற்கு வாழ்த்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கர்ப்பகால போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

அபிநவ்யாவின் கணவர் தீபக் குமார் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ’திருமணம்’ என்ற தொடரில் நடித்து புகழ் பெற்றவர் என்பதும் தற்போது அவர் ’ஈரமான ரோஜாவே 2’ உள்பட ஒருசில தொடர்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News