பொங்கல் விருந்தாக 'துணிவு' - 'வாரிசு' ரிலீஸ்: பிரபலம் அளித்த உறுதியான தகவல்!

பொங்கல் விருந்தாக 'துணிவு' - 'வாரிசு' ரிலீஸ்: பிரபலம் அளித்த உறுதியான தகவல்!

ஒரே நாளில் அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரிலீஸ் ஆவது உண்மைதான் என பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு விஜய் நடித்த ’ஜில்லா’ மற்றும் அஜீத்தின் ’வீரம்’ ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானது. அதன் பின்னர் இரு நடிகர்களின் படங்களும் ஒரே நாளில் வெளியாகாத நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய் நடித்த ’வாரிசு’ வெளியாகும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதே நாளில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜித்தின் ’துணிவு’ மற்றும் விஜய்யின் ’வாரிசு’ படங்கள் பொங்கலுக்கு வெளியாக உள்ள தகவல் உண்மை தான் என்றும் ஜனவரி 12-ஆம் தேதி ’துணிவு’ படமும், ஜனவரி 13-ஆம் தேதி ’வாரிசு’ படமும் வெளியாகின்றன என்றும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் திரையரங்குகள் நிச்சயம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதனை அடுத்து 8 ஆண்டுகளுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News