தீபாவளி திருநாளில் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!

தீபாவளி திருநாளில் சிம்பு ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம விருந்து!

சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 'மாநாடு' , 'வெந்து தணிந்தது காடு' ஆகிய இரண்டு வெற்றி படங்களை கொடுத்த சிம்புவின் அடுத்த படமான ‘பத்து தல’ என்ற திரைப்படம் டிசம்பர் 14ஆம் தேதி என்ற படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சிம்பு நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக தற்போது ஓடிடியில் இந்த படம் வெளியாகும் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 21ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் சிம்பு ரசிகர்களுக்கு சரியான தீபாவளி விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

திரையரங்குகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ’வெந்து தணிந்தது காடு’ ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் எதிர்பார்த்ததை விட அதிக வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் மிக விரைவில் உருவாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES