ஸ்டார் விஜய்யின் புதிய சேனல் 'விஜய் டக்கர்': இது யூத்களுக்கான சேனல்!

ஸ்டார் விஜய்யின் புதிய சேனல் 'விஜய் டக்கர்': இது யூத்களுக்கான சேனல்!

ஸ்டார் விஜய் தமிழில் இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு சேனலை தொடங்குகிறது. இந்த சேனல் குறித்த பரபரப்பான ஏற்கனவே டீசர் வெளியான நிலையில் தற்போது புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. ‘விஜய் டக்கர்’ என்ற சேனல் தமிழ் இளைஞர்களுக்கான சேனலாக அமைந்துள்ளது.

விஜய் டக்கர் சேனல் இன்றைய இளைஞர்களை பிரதிபலிக்கும் ஒரு பிராண்ட் ஆக இருக்கும். இந்த சேனல் பொழுதுபோக்கு களத்தில் டிரெண்ட்செட்டராக செயல்படும் சேனலாக இருக்கும். எனவே, ‘விஜய் டக்கர் - இனி இதுதான் ட்ரெண்ட் செட்டர்’ என்ற டேக்லைன் சரியாக பொருந்துகிறது.

விஜய் டக்கர் சேனல் இளைஞர்களின் ஆர்வங்களுக்கு ஏற்ப நிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. இந்த சேனலில் காலேஜ் டா, சினிமா காரம் காபி, டிரக் மேல லக்கு, ஸ்டைல் ஸ்டைல் தான், ஸ்டாருடன் ஒரு நாள், சம்திங் சம்திங் போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

தமிழ் இளைஞர்களின் வாழ்க்கை முறை, இளைஞர்களை ஈர்க்கும் கேம் ஷோக்கள் இதுவரை எந்த சேனலிலும் ஒளிபரப்பாத இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவை இந்த சேனலில் இடம்பெறும். மேலும் கற்பனை செய்து பார்க்க முடியாத வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் பார்வையாளர்களுக்கு வழங்க தயாராக உள்ளது. இது இளைஞர்களின் இதயங்களை கவரும் சேனலாக நிச்சயமாக இருக்கும்.

விஜய் டக்கர் இளைஞர்களின் இதயங்களையும் மனதையும் நிச்சயமாக கவரும் ஒரு அற்புதமான புதுமையான சேனலாக இருக்கும். இந்த சேனலின் புரமோ வீடியோ இதோ:

LATEST News

Trending News

HOT GALLERIES