'ஹே ராம்' படத்திற்கு பின் 'இந்தியன் 2' படம் தான்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல்!

'ஹே ராம்' படத்திற்கு பின் 'இந்தியன் 2' படம் தான்: ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் தகவல்!

கமல்ஹாசன் நடித்த ’ஹேராம்’ படத்தை அடுத்து ’இந்தியன் 2’ படத்திற்கு நீண்ட ரன்னிங் டைம் கொண்ட படம் என்ற பெருமை கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தொடங்கிய நிலையில் விரைவில் கமல்ஹாசன் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘இந்தியன் 2’ படத்தின் ரன்னிங் டைம் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஏற்கனவே கமல்ஹாசன் நடித்த ’ஹே ராம்’ திரைப்படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 12 நிமிடங்கள் என்று இருந்த நிலையில் கிட்டத்தட்ட அதே ரன்னிங் டைம் ’இந்தியன் 2’ படமும் இருக்கும் என்று கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES