நான் ஆடி பார்த்திருப்ப, பாடி பார்த்திருப்ப, நாறு நாறா கிழிச்சு பாத்துருக்கியா? 'சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டீசர்

நான் ஆடி பார்த்திருப்ப, பாடி பார்த்திருப்ப, நாறு நாறா கிழிச்சு பாத்துருக்கியா? 'சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டீசர்

பல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ’ஓ மை கோஸ்ட்’ என்ற தமிழ் படத்தில் நடித்து வந்தார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்தது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கமான சன்னி லியோனின் கவர்ச்சி காட்சிகள் அமைந்துள்ள இந்த டீசரில் த்ரில் காட்சிகளும் உள்ளன என்பது இந்த டீசரில் இருந்து தெரியவருகிறது. நான் ஆடி பார்த்திருப்ப, பாடி பார்த்திருப்ப, நாறு நாறா கிழிச்சு பாத்துருக்கியா? என்ற சன்னிலியோன் பேசும் வசனம் இந்த டீசரின் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

சன்னி லியோன், சதீஷ், யோகிபாபு, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை யுவன் இயக்கியுள்ளார். ஜாவித் ரியாஸ் இசையில், பா விஜய் பாடல் வரிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் நவம்பரில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES