ரிலீஸ் ஆன மறுநாளே 'கோப்ரா' குழுவினர் எடுத்த அதிரடி முடிவு: பயன் இருக்குமா?

ரிலீஸ் ஆன மறுநாளே 'கோப்ரா' குழுவினர் எடுத்த அதிரடி முடிவு: பயன் இருக்குமா?

விக்ரம் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘கோப்ரா’ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் மற்றும் கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

‘கோப்ரா’ படத்தை விமர்சனம் செய்த பலர் கூறிய முக்கிய குற்றச்சாட்டு படத்தின் நீளம் அதிகம் என்பதுதான். 3 மணி நேரத்திற்கு மேல் இந்த படத்தின் ரன்னிங் டைம் ஆக இருப்பது படத்திற்கு பெரிய மைனஸ் என்றும் குறிப்பாக இந்த படத்தின் விறுவிறுப்பை ரொமான்ஸ் காட்சிகள் குறைப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் ‘கோப்ரா’ படக்குழுவினர் தற்போது அதிரடி முடிவு எடுத்து படத்தின் நீளத்தை 20 நிமிடம் குறைத்துள்ளதாகவும், நீளம் குறைக்கப்பட்ட ‘கோப்ரா’ படம் இன்று மாலை முதல் திரையரங்குகளில் திரையிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது

‘கோப்ரா’ படத்தின் நீளம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டதால் படம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

LATEST News

Trending News

HOT GALLERIES