நான் இருக்கும்போது உனக்கு இன்னொருத்தி கேட்குதா? பிரபல நடிகரை நடுரோட்டில் புரட்டியெடுத்த மனைவி!

நான் இருக்கும்போது உனக்கு இன்னொருத்தி கேட்குதா? பிரபல நடிகரை நடுரோட்டில் புரட்டியெடுத்த மனைவி!

நான் இருக்கும்போது இன்னொருத்தியா? என பிரபல நடிகரையும் அவரது கள்ளக்காதலியையும் நடுரோட்டில் நடிகரின் மனைவி புரட்டி எடுத்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒடியா மொழி திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்த பாப்ஷான் மோஹண்டி என்பவர் தனது சக நடிகை ப்ருக்ருதி என்பவருடன் காரில் சென்று கொண்டிருந்தார். இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக நீண்ட நாளாக சந்தேகித்த பாப்ஷான் மனைவி இருவரையும் பின் தொடர்ந்து சென்றதாக தெரிகிறது.

ஒரு கட்டத்தில் காரை மடக்கிய பாப்ஷான் மனைவி திரிபாதி, காரில் இருந்த நடிகை பிரக்ருதி மிஸ்ராவின் தலைமுடியை பிடித்து இழுத்து சரமாரியாக தாக்கினார். ஒரு கட்டத்தில் காரிலிருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி பிரக்ருதி தப்பிச் சென்றுவிட்டார். அதன் பிறகு மீண்டும் காருக்கு வந்த பாப்ஷான் மனைவி திரிபாதி தனது கணவரிடம், ‘உனக்கு நான் இருக்கும்போது இன்னொருத்தியா? என கேட்டு தனது கணவரை நடுரோட்டில் புரட்டி எடுத்தார். அந்த பகுதியில் இருந்த பலர் மொபைல் போனில் இந்த காட்சியை வீடியோ எடுத்து இணைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ப்ருக்ருதி தாயார், திரிபாதி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாபுஷானின் மனைவி திரிபாதி அடியாட்களுடன் வந்து தனது மகளை தாக்கியதாக புகார் அளித்துள்ள நிலையில் திரிபாதி மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News