மேக்கப் இல்லாத ஷிவானி நாராயணன்: எப்படி இருக்கிறார் பாருங்க!

மேக்கப் இல்லாத ஷிவானி நாராயணன்: எப்படி இருக்கிறார் பாருங்க!

தொலைக்காட்சி சீரியல் நடிகையான ஷிவானி நாராயணன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் என்பதும் அந்த பிரபலத்தின் அடிப்படையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மில்லியன்கணக்கான ஃபாலோயர்கள் குவிந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியான ’விக்ரம்’, ‘வீட்ல விசேஷங்க’ ஆகிய திரைப்படங்களில் நடித்த ஷிவானி நாராயணன் தற்போது விஜய் சேதுபதியுடன் ஒரு படம் வடிவேலுவின் ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ உள்பட 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ள ஷிவானி நாராயணன் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்வார் என்பதும் அவரது ஒவ்வொரு பதிவிற்கும் ஏராளமான கமெண்ட்ஸ்கள் பதிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் மேக்கப் இல்லாத புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். கோவிலில் எடுக்கப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் நீட்டாக ட்ரஸ் அணிந்து, தலையில் பூ வைத்து, நெற்றியில் விபூதி குங்குமம் இட்டு அழகாக காட்சியளிக்கும் ஷிவானியை ரசித்து வரும் ரசிகர்கள், ‘ஷிவானி இப்பொழுதுதான் உண்மையிலேயே அழகாக இருக்கிறார்' என்பது போன்ற கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

HOT GALLERIES