உள்ளாடை சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த பிரபல நடிகை!

உள்ளாடை சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு சாட்டையடி பதில் கொடுத்த பிரபல நடிகை!

தமிழ் திரையுலக மற்றும் தொலைக்காட்சி நடிகை ஒருவரிடம் நெட்டிசன் ஒருவர் உள்ளாடை சைஸ் கேட்டதற்கு அவர் சாட்டையடி பதில் கொடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகைகள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் புகைப்படங்களில் கமெண்ட்ஸ்களாக ஒருசில நெட்டிசன்கள் வரம்பை மீறி கேள்வி கேட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தமிழ் திரையுலக நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகையான நீலிமாராணியிடம் உங்கள் உள்ளாடை சைஸ் என்ன என்று நெட்டிசன் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு சாட்டையடி பதிலாக நீலிமா ராணி, ‘நான் ஏன் உனக்கு இதைச் சொல்லவேண்டும், நீ எனக்கு விற்க போகிறாயா? என்று பதில் கேள்வி கேட்டுள்ளார்.

மற்றொரு நெட்டிசன் செக்ஸ் குறித்த கொச்சையான கேள்வி கேட்ட நிலையில் இந்த முட்டாளுக்கு நான் எப்படி பதில் சொல்வேன்’ என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். நீலிமா ராணியின் இந்த சாட்டையடி பதில்கள் வைரலாகி வருகிறது.

நடிகை நீலிமா ராணி கடந்த 2008ஆம் ஆண்டு இசைவாணன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில் தற்போது நீலிமா ராணி கர்ப்பமாக இருக்கிறார் என்பதும் அவருக்கு வரும் ஜனவரி மாதம் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.

LATEST News

HOT GALLERIES