அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இந்த பிரபலமும் இணைகிறாரா?

அஜித்தின் 'ஏகே 61' படத்தில் இந்த பிரபலமும் இணைகிறாரா?

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தற்போது ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருக்கும் அஜித் விரைவில் இந்தியா திரும்பி விடுவார் என்றும் அதன்பின் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் அஜித் கலந்து கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புனேவில் நடைபெறும் ‘ஏகே 61’ படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பில் அஜித்துடன் மஞ்சுவாரியர் உள்பட படக்குழுவினர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அஜய் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பல தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்துள்ள அஜய், ‘ஏகே 61’ படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தின் வில்லனாக ’சார்பாட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ஜான் கொகைனா மற்றும் வீரா உள்பட ஒருசிலர் நடித்து வரும் நிலையில் தற்போது இந்தப் பட்டியலில் அஜய்யும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று முதலில் தகவல் வெளிவந்தாலும் தற்போது இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES