நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோ: அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

நடிகை வரலட்சுமி வெளியிட்ட வீடியோ: அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

பிரபல நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக வெளியிட்டுள்ள வீடியோவை அடுத்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகளும் நடிகையுமான வரலட்சுமி சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன் அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனவே அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்றும் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் கடந்த சில தினங்களில் தன்னை சந்தித்தவர்கள் உடனடியாக கொரோனா வைரஸ் அறிகுறிகளை கவனித்து பரிசோதனை செய்து கொள்ளவும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் பொதுமக்களும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

நடிகை வரலட்சுமி தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளதை அனுப்பிய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் விரைவில் அவர் குணமாக வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES