சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவுண்டமணி? என்ன கேரக்டர் தெரியுமா?

சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் கவுண்டமணி? என்ன கேரக்டர் தெரியுமா?

சிவகார்த்திகேயன் அடுத்த திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும் அவருடைய கேரக்டரும் இதுதான் என்றும் வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த பல ஆண்டுகளாக கவுண்டமணி நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார் என்பதும் கவுண்டமணி - செந்தில் நடிக்காத படமே இல்லை என்று கடந்த 90 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளில் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக முழு ஓய்வு எடுத்து வரும் கவுண்டமணியை மீண்டும் நடிக்க வைக்க சிலர் முயற்சித்தும் அவர் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவுண்டமணியை சிவகார்த்திகேயன் சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும்,அவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கேரக்டரில் அவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க கவுண்டமணி சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அதற்கு சிவகார்த்திகேயன் படக்குழுவினர் ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் இந்த படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’மாவீரன்’ திரைப்படத்தில் தான் கவுண்டமணி நடிக்க இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News