'எவன் தடுத்தாலும் சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்: அருள்நிதியின் 'தேஜாவு' டிரைலர்

'எவன் தடுத்தாலும் சுட்டுட்டு போயிட்டே இருப்பேன்: அருள்நிதியின் 'தேஜாவு' டிரைலர்

அருள்நிதி நடித்த ’டீ பிளாக்’ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் நடித்த இன்னொரு படமான ‘தேஜாவு’ ஜூலை 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்பட்டது.

அந்த வகையில் சற்று முன்னர் ‘தேஜாவு’ படத்தின் டிரைலர் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. எழுத்தாளர் ஒருவர் தான் எழுதும் கற்பனை கதாபாத்திரங்கள் தன்முன் தோன்றி பயமுறுத்துவதாக காவல்துறையில் புகார் அளிக்கிறார்.

ஆனால் அவர் எழுதும் ஒவ்வொரு காட்சியும் உண்மையாகவே நடந்து வருவதாக காவல்துறையினர் கண்டுபிடிக்கின்றனர். இந்த வழக்கை விசாரிக்கும் அருள்நிதி இந்த மர்ம முடிச்சை அவிழ்த்தாதாரா? என்பதுதான் இந்த படத்தின் கதை என்பது ட்ரெய்லரில் இருந்து தெரியவருகிறது.

அருள்நிதி, மதுபாலா, காளி வெங்கட், அச்சுத் குமார், ஸ்மிருதி, ராகவ் விஜய், சேத்தன், 'மைம்' கோபி, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அரவிந்தன் ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் அருள்நிதியின் மற்றொரு வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

HOT GALLERIES