'விக்ரம் 'பாடலுக்கு சூப்பர் சிங்கர் பிரகதியின் வேற லெவல் வொர்க்-அவுட்: வீடியோ வைரல்

'விக்ரம் 'பாடலுக்கு சூப்பர் சிங்கர் பிரகதியின் வேற லெவல் வொர்க்-அவுட்: வீடியோ வைரல்

விஜய் டிவியில் கடந்த 2012 ஆம் ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரகதி குருபிரசாத் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பதும், அவர் அதன் பிறகு பாலாவின் ‘தாரை தப்பட்டை’ உள்பட அவருக்கு ஒருசில திரைப்படங்களில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது என்பது தெரிந்ததே.

மேலும் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் பிரகதி ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும், அவ்வப்போது பிகினி உடையுடன் கூடிய புகைப்படங்கள் உள்பட பல்வேறு கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார் என்பதும் அவை மிகப் பெரிய அளவில் வைரலாகி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான கமல்ஹாசனின் ’விக்ரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு பிரகதி வொர்க் அவுட் செய்யும் வீடியோவை பிரகதி குருபிரசாத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட்ஸ், லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


LATEST News

Trending News

HOT GALLERIES