நயன் - விக்கியை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை: வைரல் புகைப்படம்

நயன் - விக்கியை சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை: வைரல் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த மாதம் திருமணம் செய்தார் என்பதும் அதன் பின்னர் தாய்லாந்து நாட்டிற்கு இருவரும் தேனிலவு சென்று வந்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது தேனிலவை முடித்து விட்டு இந்தியா திரும்பியுள்ள இந்த தம்பதிகளில் நயன்தாரா ஷாருக்கானின் ’ஜவான்’  படத்தின் படப்பிடிப்பில் உள்ளார் என்பதும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ’ஜவான்’   படத்தின் படப்பிடிப்பின்போது நயன்தாரா மற்றும்  விக்னேஷ் சிவனை பிரபல பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. மேலும் அன்பான தம்பதிகளான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் அதில் மலைக்கா குறிப்பிட்டு உள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’உயிரே’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் நடிகை மலைக்கா அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES