'தி லெஜண்ட்' திரைப்படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

'தி லெஜண்ட்' திரைப்படத்தை உலக அளவில் ரிலீஸ் செய்யும் பிரபல நிறுவனம்!

சரவணா ஸ்டோர் அதிபர் அருள் சரவணன் நடித்த ’தி லெஜண்ட்’ திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகியுள்ள நிலையில் இந்த படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது

இந்த நிலையில் ’தி லெஜண்ட்’ திரைப்படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ள நிலையில் இந்த படத்தை சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய API பிலிம்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை சர்வதேச அளவில் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா தவிர மற்ற அனைத்து நாடுகளிலும் API பிலிம்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் இப்படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

அருள் சரவணன் விஞ்ஞானியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் டிரைலருக்கு பிறகு இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெஜண்ட் சரவணன், ஊர்வசி ரெளட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES