புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடி: புகைப்படம் வைரல்!

புதிய கார் வாங்கிய விஜய் டிவி பிரபல ஜோடி: புகைப்படம் வைரல்!

விஜய் டிவியில் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தவர்கள் அடுத்தடுத்த நிகழ்ச்சியிலும் வாய்ப்புகள் பெற்று சின்னத்திரை மட்டுமின்றி பெரிய திரையிலும் நடித்து வருகிறார்கள் என்பது பார்த்து வருகிறோம். குறிப்பாக சிவகார்த்திகேயன், சந்தானம் உள்பட ஒரு சிலர் விஜய் டிவியில் இருந்து வந்த பிரபலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் டிவியில் இருக்கும் சீரியல் நடிகர், நடிகைகள், தொகுப்பாளினிகள் ஆகியோருக்கும் நல்ல வருமானம் கிடைத்து வருகிறது என்பதும் படிப்படியாக ஒவ்வொருவராக சொந்த கார் வாங்கி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வந்தோம்.



விஜய் டிவி தொடர்களில் நடித்த நடித்து அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி நாராயணன், தாடி பாலாஜி, ’குக் வித் கோமாளி’ பிரபலம் மணிமேகலை மற்றும் சரத் உள்பட பலர் புதிய கார்களை வாங்கி உள்ளனர். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்து கொண்ட கேப்ரில்லா சமீபத்தில் புதிய கார் வாங்கினார்.

இந்த நிலையில் தற்போது கார் வாங்கிய விஜய் டிவி பிரபலங்களின் பட்டியலில் மைனா நந்தினி இணைந்துள்ளார். மைனா நந்தினி மற்றும் அவரது கணவர் யோகேஸ்வரன் ஆகிய இருவருமே விஜய் டிவியில் உள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அவர்கள் புதிய கார் வாங்கி உள்ள புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த பதிவில் மைனா நந்தினி தனது கணவருக்கு முத்தம் கொடுப்பது போல் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES