'பொன்னியின் செல்வன்' டிரைலர் ரிலீஸ் தேதி இதுவா?

'பொன்னியின் செல்வன்' டிரைலர் ரிலீஸ் தேதி இதுவா?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

ஏற்கனவே ஆதித்த கரிகாலன், ராஜராஜ சோழன், வந்தியத்தேவன், நந்தினி ஆகிய கேரக்டர்களின் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நாளை அதாவது ஜூலை 8-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை லைகா நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு கேரக்டர்களின் போஸ்டர் வெளியாகி மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த ஆச்சரியத்தின் உச்சகட்டமாக நாளை வெளியாகும் டீசர் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES