ரம்யா பாண்டியனின் மூன்லைட் போட்டோஷூட்: பச்சை காஸ்ட்யூமில் செம கிளாமர்!

ரம்யா பாண்டியனின் மூன்லைட் போட்டோஷூட்: பச்சை காஸ்ட்யூமில் செம கிளாமர்!

தமிழ் திரையுலக நடிகைகளில் ஒருவரான ரம்யா பாண்டியன் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் செய்துவரும் நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் மூன்லைட் போட்டோஷாப் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். உச்சகட்ட கிளாமராக இருக்கும் அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் திரையுலகின் நடிகையும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவருமான ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டரை மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் தெரிந்ததே.

தனது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து இணையதளங்களை ஸ்தம்பிக்க வைக்கும் ரம்யா பாண்டியன் கடந்த இரண்டு நாட்களாக மூன்லைட் வெளிச்சத்தில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார்.

நேற்று கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனையடுத்து இன்று செம கிளாமர் பச்சை காஸ்ட்யூமில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் தற்போது ‘இடும்பன்காரி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES