ஹன்சிகாவின் வேற லெவல் பீச் கிளாமர் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

ஹன்சிகாவின் வேற லெவல் பீச் கிளாமர் புகைப்படம்: இணையத்தில் வைரல்!

தமிழ் திரையுலகில் ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் தற்போது மீண்டும் பிஸியான நடிகையாக மாறி இருக்கும் ஹன்சிகாவின் வேற லெவல் கிளாமர் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹன்சிகா தமிழில் ’எங்கேயும் காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதன்பின் விஜய்யுடன் ’வேலாயுதம்’ உதயநிதியுடன் ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ சிவகார்த்திகேயனுடன் ’மான் கராத்தே’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.

தற்போது ஹன்சிகா, சிம்புவுடன் நடித்த ’மஹா’ திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் இந்த படம் ஹன்சிகாவின் ஐம்பதாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ஹன்சிகாவுக்கு ஐந்து மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பதும் இன்ஸ்டாகிராமில் அவர் பல்வேறு புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் ஹன்சிகா சற்றுமுன்னர் கடற்கரை மணலில் இருந்தபடி பதிவு செய்துள்ள கிளாமர் புகைப்படம் மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் தற்போது ஹன்சிகா ’ரவுடிபேபி’ விஜய் சந்தர் இயக்கத்தில் ஒரு படம், ஆர் கண்ணன் இயக்கத்தில் ஒரு படம் உள்பட 4 தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES