பிரபல இயக்குனரின் படத்தில் நடிகையாகிறார் 'குக் வித் கோமாளி' கனி!

பிரபல இயக்குனரின் படத்தில் நடிகையாகிறார் 'குக் வித் கோமாளி' கனி!

‘குக் வித் கோமாளி' சீசன் 2 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் கனி, பிரபல இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார்.

‘குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் பட்டம் பெற்றவரும் இயக்குனர் திருவின் மனைவியுமான கனி, இயக்குனர் சுசீந்திரன் இயக்கும் ’வள்ளிமயில்’ என்ற திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார். இவரது சகோதரிகளான விஜயலட்சுமி மற்றும் நிரஞ்சனி ஆகியோரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ’வள்ளிமயில்’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீமயி என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் நடிகை ஊர்வசியின் சகோதரி கல்பனாவின் மகள் என்பதும், இந்த படத்தின் மூலம்தான் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

’வள்ளிமயில்’ படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

LATEST News

Trending News

HOT GALLERIES