'சந்திரமுகி 2' படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

'சந்திரமுகி 2' படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரபு, ஜோதிகா உள்பட பலர் நடித்த திரைப்படம் ’சந்திரமுகி’. கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் மிகப் பெரிய வசூல் மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ’சந்திரமுகி 2’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நிலையில் இந்த படத்தின் பணிகள் தற்போது தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராகவா லாரன்ஸ் முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்தை பி.வாசு இயக்க இருப்பதாகவும் ஆனால் அதேநேரத்தில் சந்திரமுகி படத்தின் முதல் பாகத்திற்கும் இந்த படத்தின் கதைக்கும் சம்பந்தமில்லை என்றும் இரண்டும் வெவ்வேறு கதை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தின் இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி என்று தகவல் வெளியாகி உள்ளது. இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி ஏற்கனவே ’பாகுபலி’ ’பாகுபலி 2’ உள்பட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் இந்த படம் குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES