10 வருடங்களுக்கு பின் மாறாதது இது ஒன்று தான்: கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

10 வருடங்களுக்கு பின் மாறாதது இது ஒன்று தான்: கமலுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆண்ட்ரியா!

உலக நாயகன் கமலஹாசனுடன் எடுத்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, பத்து வருடங்களுக்குப் பின்னும் மாறாதது இது ஒன்றுதான் என்று நடிகை ஆண்ட்ரியா பதிவு செய்துள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த ’விஸ்வரூபம்’ திரைப் படத்தின் படப்பிடிப்பின்போது கமல்ஹாசனுடன் பூஜா ஹெக்டே மற்றும் ஆண்ட்ரியா எடுத்த புகைப்படத்தை, ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில் ஆண்ட்ரியா கட்டியிருந்த அதே சேலையை தற்போது அணிந்து, 10 வருடங்களுக்கு முன் அணிந்த அதே சேலை மீண்டும்’ என கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குறிப்பாக நீங்கள் 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்தீர்களோ, அப்படியே இருக்கிறீர்கள், உங்கள் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை’ போன்ற கமெண்ட்ஸ் அதிகமாக பதிவாகி விடுகிறது.

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா தற்போது ’பிசாசு 2’ உள்பட மொத்தம் எட்டு தமிழ் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவை வரிசையாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News