முன்னதாகவே அறிவிக்கப்பட்ட 'கோப்ரா' ரிலீஸ் தேதி!

முன்னதாகவே அறிவிக்கப்பட்ட 'கோப்ரா' ரிலீஸ் தேதி!

சியான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் அரை மணி நேரத்துக்கு முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சியான் விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவான ‘கோப்ரா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 11 என அதிகாரபூர்வமாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டது. இது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், கேஎஸ் ரவிக்குமார், ஆனந்தராஜ், ரோபோ சங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவில் புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES