பிக்பாஸ் பாவனியை என்னய்யா செய்கிறார் அமீர்? வைரல் வீடியோ

பிக்பாஸ் பாவனியை என்னய்யா செய்கிறார் அமீர்? வைரல் வீடியோ

பிக்பாஸ் பாவனிக்கு பிக்பாஸ் அமீர் வொர்க்அவுட் செய்ய உதவி செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ரெட்டி ஆகிய இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது காதலித்ததாக கூறப்பட்டது. அமீர் தனது காதலை வெளிப்படையாக பாவனியிடம் தெரிவித்த போதிலும் அந்த காதலை பாவனி ரெட்டி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் விரைவில் இருவருக்கும் காதல் மலரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் ஜோடியாக நடனம் ஆடி வருகிறார்கள் என்பதும், அவர்களுடைய நடனத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சற்று முன் பாவனி ரெட்டி தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பாவனிக்கு அமீர் வொர்க்அவுட் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், ‘அமீர் பாவனியை என்னய்யா செய்கிறார்? என்று கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES