லெஜண்ட் சரவணனுடன் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி

லெஜண்ட் சரவணனுடன் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்துள்ள படத்தில் ராய் லட்சுமி குத்தாட்டம் போட்டுள்ள பாடல் வீடியோ வைரலாகி வருகிறது.

லெஜண்ட் சரவணனுடன் குத்தாட்டம் போட்ட ராய் லட்சுமி

லெஜண்ட் சரவணன்

நடிகர்களை வைத்து விளம்பரங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்தியில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் லெஜண்ட் சரவணன் தானே நடித்து பிரபலமானார். இவர் தன்னுடைய தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் முதல் படத்தில் கதாநாயகனாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார். இத்திரைப்படத்தை அஜித்தை வைத்து 'உல்லாசம்' படத்தை இயக்கிய ஜே.டி மற்றும் ஜெரி என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்குகின்றனர். இப்படத்திற்கு ”தி லெஜண்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசையமைக்கிறார். 

 

லெஜண்ட் சரவணன்

லெஜண்ட் சரவணன்

 

இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா, பிரபு, யோகிபாபு, நாசர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்திலிருந்து வெளியான 'மோசலோ மொசலு' பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'தி லெஜண்ட்' படத்தில் இடம் பெற்றுள்ள 'வாடிவாசல்' பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைலராகி வருகிறது. இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மே 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.  

LATEST News

Trending News

HOT GALLERIES