உன் அட்வைஸ் கூந்தலை நீயே வச்சுக்கோ: கமெண்ட் போட்ட பெண்ணுக்கு பதிலடி கொடுத்த விஜயலட்சுமி!
கமெண்ட் மூலம் அட்வைஸ் செய்த பெண் ஒருவருக்கு ‘உன் அட்வைஸ் கூந்தலை நீயே வைத்துக் கொள்’ என நடிகை விஜயலட்சுமி பதிலடி கொடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரும், சர்வைவர் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான விஜயலட்சுமி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பது தெரிந்ததே. குறிப்பாக அவர் பல வொர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் நடன வீடியோவை பதிவு செய்து வரும் நிலையில் சமீபத்தில் நடனமாடிய வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார்.
இந்த வீடியோவுக்கு பலர் பாசிட்டிவ் கமெண்டுகள் அளித்திருந்த நிலையில் பெண் ஒருவர் இந்த வீடியோவுக்கு ’அம்மாவாக இருக்கும் உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா? என்று கமெண்ட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த விஜயலட்சுமி, ‘அம்மா ஆகிவிட்டால் மூலையில் உட்கார்ந்துகொண்டு அழவேண்டுமா? அம்மா ஆகிவிட்டால் வாழ்க்கை முடிந்து என்று குடும்பத்திற்காக தியாகியாக வாழவேண்டுமா? எனக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது, அந்த வாழ்க்கையை நான் வாழ்வேன். நான் விரும்பிய ஆடைகளை அணிவேன். எனக்கு தெரிந்த நடனத்தை ஆடுவேன்’ என்று பதிலளித்தார்.
மேலும் உங்களை மாதிரி ஆட்களால் தான் தாயான பெண்கள் மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள் என்றும் மற்றவர்களை எடை போடுவதை நிறுத்துங்கள் என்றும் நீங்கள் குத்துவிளக்காக இருக்கிறோம் என்பதற்காக மற்றவர்களை பொறாமையால் கமெண்ட் செய்யாதீர்கள் என்று உங்களது அட்வைஸ் கூந்தலை நீங்களே வைத்து அதில் பூ வைத்து கொள்ளவும் என்றும் பதிலடி கொடுத்திருந்தார் .
இந்த பதிவிற்கு பிக்பாஸ் போட்டியாளர் அனிதா உள்பட பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.