விக்ரம் - பா ரஞ்சித் இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்!

விக்ரம் - பா ரஞ்சித் இணையும் படத்தின் சூப்பர் அப்டேட்!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இந்த படத்தின் சூப்பர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் பா ரஞ்சித் தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்து உள்ளார் என்பதும் இதனை அடுத்து அவர் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்திற்கு ‘மைதானம்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படமும் ‘சார்பாட்டா பரம்பரை’ போல் ஒரு ஸ்போர்ட்ஸ் படம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது விக்ரம் -பா ரஞ்சித் இணையும் திரைப்படம் வரும் ஜூலை மாதம் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது வெளிநாட்டில் இருக்கும் விக்ரம், இந்தியா திரும்பி வந்தவுடன் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’துருவ நட்சத்திரம்’ படத்தை முடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், அதன் பின்னர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கார்த்தி நடித்த ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போதே விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்க திட்டமிடப்பட்டது என்பதும், ஆனால் ரஜினியின் ’கபாலி’, ‘காலா’ என அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படம் தள்ளிப்போனது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES