பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியான விஜய் பட நடிகை!

பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தின் நாயகியான விஜய் பட நடிகை!

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் நாயகியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, பிரபாஸ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது .

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது சித்தார்த் மல்கோத்ரா நடித்துவரும் ’மிஷின் மஞ்சு’ மற்றும் அமிதாப்பச்சன் நடித்து வரும் ’குட்பை’ ஆகிய பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கில் ’சீதாராமன்’ மற்றும் ’புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, தமிழில் தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் .

இந்த நிலையில் தற்போது பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்திலும் அவர்தான் நாயகி என்ற தகவல் வெளியாகியுள்ளது. ’அர்ஜூன் ரெட்டி’ இயக்குநர் சந்தீப் இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ என்ற படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள நிலையில் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES