அனிருத் பாடிய 'டான்' ஜலபுல ஜங்கு' பாடல்: சிவகார்த்திகேயனின் வேற லெவல் டான்ஸ்!

அனிருத் பாடிய 'டான்' ஜலபுல ஜங்கு' பாடல்: சிவகார்த்திகேயனின் வேற லெவல் டான்ஸ்!

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் சற்று முன்னர் ‘டான்’ படத்தில் இடம்பெற்ற ஜலபுல ஜங்கு என்ற பாடலின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

அனிருத் கம்போஸ் செய்த இந்த பாடலை ரோகேஷ் எழுதி உள்ளார் என்பதும் அனிருத் பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிருத்தின் அட்டகாசமான குரலில் சிவகார்த்திகேயன் வேற லெவல் டான்ஸில் உருவாகியுள்ள இந்த பாடலின் புரமோ வீடியோவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஷிவாங்கி உள்பட பலர் நடித்துள்ளனர். சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் பாஸ்கரன் ஒளிப்பதிவில் நாகூரான் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ’டாக்டர்’ என்ற மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தை அடுத்து வெளியாகும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES