'விக்ரம்' படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள்: வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறிய விஜய்சேதுபதி!

'விக்ரம்' படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள்: வீடியோவை வெளியிட்டு வாழ்த்து கூறிய விஜய்சேதுபதி!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்’ படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளின் வீடியோவை வெளியிட்டு உள்ள நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிந்த அன்பறிவ் என்ற இரட்டையர்களுக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உள்பட பலரது நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்’. அனிருத் இசையில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மே 15ஆம் தேதி நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகிறது .

இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் இயக்குனர்களான அன்பறிவ் என்ற இரட்டையர்களின் பிறந்தநாளை அடுத்து அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ள விஜய் சேதுபதி, 'விக்ரம்’ படத்தில் அன்பறிவ் அமைத்த ஸ்டண்ட் காட்சிகளின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES