ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பா ரஞ்சித் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

ஓடிடியில் ரிலீஸ் ஆகும் பா ரஞ்சித் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

பா ரஞ்சித் அடுத்த திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா ரஞ்சித் தற்போது ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன், துஷரா விஜயன் நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்த நிலையில் பா ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான திரைப்படம் ’சேத்துமான்’. இந்த படம் மே 27-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மாணிக்கம், அஸ்வின், குமார், சாவித்திரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். பிந்து மாலினி இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES