நடிகை சிம்ரனுக்கு எவ்வளவு பெரிய மகன்களா? வைரல் வீடியோ

நடிகை சிம்ரனுக்கு எவ்வளவு பெரிய மகன்களா? வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக கடந்த 2000ம் ஆண்டுகளில் இருந்த சிம்ரனின் மகன்கள் குறித்த வீடியோ வெளியாகி உள்ள நிலையில் சிம்ரனுக்கு இவ்வளவு பெரிய மகன்களா? என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் .

தமிழில் ’விஐபி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் ’நேருக்குநேர்’ ’நட்புக்காக’ ’வாலி’ ’ஜோடி’ ’பார்த்தேன் ரசித்தேன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சிம்ரன். இவர் தற்போதும் ’ராக்கெட்டரி’, ‘அந்தகன்’, ‘கேப்டன்’, ‘துருவ நட்சத்திரம், ‘ வணங்காமுடி’ போன்ற படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை சிம்ரன் கடந்த 2003ஆம் ஆண்டு தனது நீண்டகால தோழர் தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். 2005 ஆம் ஆண்டு அதிப் என்ற மகனும் 2011ம் ஆண்டு ஆதித் வீர் என்ற மகனும் பிறந்த நிலையில் தற்போது இருவரும் நன்றாக வளர்ந்து இளைஞர்கள் ஆகி உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் தனது மகன்களுடன் கூடிய வீடியோவை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் அவருடைய மகன்கள் இருவருமே நன்றாக வளர்ந்து இளைஞர்கள் ஆகியுள்ளதை அடுத்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து இந்த வீடியோவுக்கு லைக்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES