நயன்தாராவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை!

நயன்தாராவின் அடுத்த படத்தில் இணைந்த பிரபல நடிகை!

நயன்தாரா நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் இணைந்து உள்ளதாக பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகை நயன்தாரா நடித்து வரும் படங்களில் ஒன்று சிரஞ்சீவியின் ’காட்பாதர்’ என்பதும் இந்த படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் மோகன்லால் கேரக்டரில் சிரஞ்சீவியும் மஞ்சு வாரியர் கேரக்டரில் நயன்தாராவும் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை தன்யா ரவிச்சந்திரன் இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் ‘லூசிபர்’ படத்தில் சான்யா ஐயப்பன் நடித்த கேரக்டரில் நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

நடிகை தன்யா ரவிச்சந்திரன் இயக்குனர் மோகன் ராஜாவுடன் எடுத்த செல்பி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்டில் பதிவு செய்து ’காட்பாதர்’ படத்தில் இணைந்திருப்பதை உறுதி செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் சல்மான் கான் சிறப்பு தோற்றத்தில் சிரஞ்சீவியுடன் ஒரு பாடலுக்கு நடனமாடவுள்ளார் என்பதும், இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பிரபுதேவா பணிபுரியவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES