அவனை அடிச்சா ஆக்டிவ் ஆகிருவாண்டா.. எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' டிரைலர்

அவனை அடிச்சா ஆக்டிவ் ஆகிருவாண்டா.. எஸ்.ஜே.சூர்யாவின் 'கடமையை செய்' டிரைலர்

எஸ் ஜே சூர்யா மற்றும் யாஷிகா ஆனந்த் நடித்த ’கடமையை செய்’ என்ற படத்தின் ட்ரெய்லர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஜினியரிங் படித்த எஸ்.ஜே.சூர்யா, படிப்புக்கு தகுந்த வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை பார்த்து வருகிறார். அப்போது அவருக்கு திடீரென ஒரு விபத்து ஏற்பட்டு படுகாயம் ஏற்படுகிறது. இந்த காயத்தால் அவருடைய உடலில் மாற்றம் ஏற்படுகிறது. அந்த மாற்றம் என்ன? அவரை அடித்தால் அவருக்கு அதீத பலம் வருவது ஏன்? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன? என்பது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

வெங்கட்ராகவன் இயக்கத்தில், வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் அருண்ராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த், மொட்டை ராஜேந்திரன், வினோத், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர் .

இந்த படத்தின் கதை வித்தியாசமாக இருப்பதாகவும் இந்த படம் நிச்சயம் எஸ்ஜே சூர்யாவுக்கு ஒரு வெற்றி படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News