உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி': முக்கிய தகவலை பகிர்ந்த அருண்ராஜா காமராஜ்!
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகிய ’நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்தது. இதனை அடுத்து தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தின் சென்சார் தகவலை பகிர்ந்துள்ளார். இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்துவிட்டதை அடுத்து ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்தின் ‘வலிமை’ படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் உதயநிதி, ஆரி, தன்யா ரவிச்சந்திரன். சிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையில், தினேஷ்குமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.