டிரைலரில் இருந்த காட்சிகள் படத்தில் இருக்காது: வருத்தத்துடன் கூறிய 'சாணிக்காகிதம்' இயக்குனர்!

டிரைலரில் இருந்த காட்சிகள் படத்தில் இருக்காது: வருத்தத்துடன் கூறிய 'சாணிக்காகிதம்' இயக்குனர்!

செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்த ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தை நாளை மறுநாள் திரையரங்குகளில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில் டிரெய்லரில் பார்த்த பல காட்சிகள் படத்தில் இருக்காது என இந்த படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் வருத்தத்துடன் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

‘சாணிக்காகிதம்’ படத்தை சென்சார் செய்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்து உள்ளனர் என்றும் அது தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளதாகவும் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் கூறினார். அதுமட்டுமின்றி சென்சாரில் பல காட்சிகளை வெட்ட சொல்லி விட்டார்கள் என்றும் அதற்காக தனது கண்டனங்களையும் அவர் தெரிவித்துக் கொண்டார் .

மேலும் டிரைலர் வெளியாகி ரசிகர்களால் ரசித்து பார்க்கப்பட்ட பல காட்சிகள் படத்தில் இருக்காது என்பது மிகப்பெரிய துரதிர்ஷ்டம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அருண் மாதேஸ்வரனின் இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LATEST News

Trending News