நீச்சல் குளத்தில் இருந்து ஃபிளையிங் கிஸ்: வைரலாகும் வித்யூலேகா வீடியோ!

நீச்சல் குளத்தில் இருந்து ஃபிளையிங் கிஸ்: வைரலாகும் வித்யூலேகா வீடியோ!

தமிழ் திரையுலகின் காமெடி நடிகை வித்யூலேகா நீச்சல் குளத்திலிருந்து ரசிகர்களுக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கிய ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் காமெடி நடிகையாக அறிமுகமான வித்யூலேகா, விஜய் நடித்த ’ஜில்லா’ அஜித் நடித்த ’வீரம், சூர்யா நடித்த ’மாஸ்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கி வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு சஞ்சய் என்பவரை வித்யூலேகா திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த திருமணத்திற்கு பல முன்னணி பிரமுகர்கள் வந்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் வித்யூலேகாவுக்கு ஏராளமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், அவர் பதிவு செய்யும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில் சற்று முன்னர் நீச்சல்குளத்தில் செம ஜாலியாக நீச்சல் அடித்துக் கொண்டே ரசிகர்களுக்கும் ஃபிளையிங் கிஸ் கொடுத்து உள்ள வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES