மார்பக அறுவை சிகிச்சைக்கு சில மணி நேரத்திற்கு முன் செம டான்ஸ் ஆடிய நடிகை!
பிரபல தொலைக்காட்சி நடிகை சாவ்வி மிட்டல். இவருக்கு சமீபத்தில் மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் ஆனார்
இந்த நிலையில் அவர் அறுவை சிகிச்சைக்கு தயாராவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அறுவை சிகிச்சைக்கு பின் தனக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் நெகிழ்ச்சியுடன் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.