ஜிம் சூட்டில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!

ஜிம் சூட்டில் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரபல நடிகை… வைரலாகும் புகைப்படம்!

இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர்தான் நடிகை வேதிகா. இவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

நடிகை வேதிகா ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் உருவான “மதராசி“ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து ராகவா லாரான்ஸுடன் இணைந்து “முனி“, சிம்புவுடன் இணைந்து “காளை“, சாந்தனுவுடன் இணைந்து “சக்கரக்கட்டி“, சித்தார்த்துடன் இணைந்து “காவியத்தலைவன்“ போன்ற படங்களில் நடித்திருந்தார். இதைத்தவிர பரதேசி படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழில் அதிகம் கவனம் செலுத்தாத நடிகை வேதிகா தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டுவரும் அவர் தன்னுடைய புதுப்புது போட்டோஷுட் புகைப்படங்களையும் அதில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது கோல்டன் நிறத்தில் ஜிம் சூட் உடையில் அவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் ஸ்லிம் பியூட்டி எனப் பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News