முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனை!
சரவணா ஸ்டோர் அதிபர் லெஜண்ட் சரவணன் நடித்த 'லெஜண்ட்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகிய இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற 'மொசலோ மொசலு’ என்ற பாடல் வெளியானது என்பதும், மிகவும் கலர்புல்லாக இருந்த இந்த பாடல் இணையத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த பாடல் தற்போது 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது. மேலும் யூடியூபில் இன்னும் இந்த பாடல் டிரெண்டில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் திரையுலகில் மாஸ் நடிகர்கள் செய்யும் சாதனைகளை முதல் படத்திலேயே லெஜண்ட் சரவணன் படம் செய்த சாதனையை அடுத்து கோலிவுட் திரையுலகினரை ஆச்சரியத்தில் உள்ளனர்.