'தலைவர் 169' பட இயக்குனர் மாற்றமா? நெல்சனின் பரபரப்பு பதிவு!

'தலைவர் 169' பட இயக்குனர் மாற்றமா? நெல்சனின் பரபரப்பு பதிவு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தை நெல்சன் இயக்குவார் என்றும் நெல்சன் இயக்க மாட்டார் என்றும் இருவேறு கருத்துக்கள் இணையதளங்களில் பரவி வரும் நிலையில் நெல்சன் மறைமுகமாக ’தலைவர் 169’ படத்தின் இயக்குனர் நான்தான் என பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவான ’பீஸ்ட்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த், நெல்சன் மீது அதிருப்தி அடைந்ததாகவும் இதனால் ’தலைவர் 169’ படத்தின் இயக்குனர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இயக்குனர்கள் அட்லி மற்றும் தேசிங்கு ராஜா ஆகிய இருவரில் ஒருவர்தான் ’தலைவர் 169’ படத்தின் இயக்குனர் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் வரிசையில் தலைவர் 169 படத்தின் இயக்குனர் என பதிவு செய்துள்ளதை அடுத்து ’தலைவர் 169’ படத்தின் இயக்குனர் நான்தான் என அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக வலைதளங்களில் மிக வேகமாக செய்தி பரவி வருகிறது

மேலும் தலைவர் 169 படத்தின் இயக்குனர் மாற்றம் செய்ய இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் முழுக்க முழுக்க வதந்தி என்றும் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத், சன்பிக்சர்ஸ் கூட்டணியில் தலைவர் 169 படம் நிச்சயம் உருவாகும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News