பார்வையற்றோர்களுக்கு ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பார்வையற்றோர்களுக்கு ஆடியோ மூலம் விளக்கும் 'மாயோன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இதுவரை இல்லாத அளவில் ஒரு முழு திரைப்படத்தை பார்வையற்றவர்களுக்கு ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் ‘மாயோன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சிபிராஜ் நடிப்பில் கிஷோர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயோன்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டீசரில் படக்குழுவினர் ஒரு புதிய முயற்சியை எடுத்தனர். அதன்படி பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளும் இந்த படத்தை ரசிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காட்சியையும் ஆடியோ மூலம் விளக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் முழு படத்தையும் ஆடியோ மூலம் பார்வையற்றவர்களுக்கு விளக்கும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் ‘மாயோன்’ திரைப்படம் வரும் ஜூன் 17ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் இசையில் ராம்பிரசாத் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் சிபி சத்யரஜ் ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார் பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES