'பீஸ்ட்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா?
தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகிய நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் கசிந்துள்ளது.
கடந்த நான்கு நாட்கள் விடுமுறை நாட்களாக இருந்ததால் ’பீஸ்ட்’ படத்தின் வசூல் திருப்திகரமாக இருந்தது என்றும் ஆனால் இன்று பல திரையரங்குகள் நிரம்பவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அதிக அளவில் நெகட்டிவ் விமர்சனங்கள் உள்ளதால் அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடுவது சந்தேகம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து விரைவில் இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் இரண்டு பிரபல ஓடிடி பிளாட்பாரத்தில் ’பீஸ்ட்’ திரைப்படம் வெளியாகும் என்றும் அனேகமாக ’பீஸ்ட்’ படம் மே மாதம் 11ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 16 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ’பீஸ்ட்’ திரைப்படமும் மிக விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.