ஜெய் படத்திற்காக ரூ.1 கோடி மதிப்பில் செட்: அப்படி என்ன இருக்கு அந்த செட்டில்?
நடிகர் ஜெய் நடித்துவரும் திரைப்படத்திற்காக ஒரு கோடி மதிப்பில் விமானம் செட் போடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .
நடிகர் ஜெய் நடித்து வரும் படங்களில் ஒன்று ‘பிரேக்கிங் நியூஸ்’. இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட முழுவதுமே விமானத்தில் நடக்க இருக்கும் நிலையில் பழைய விமானம் ஒன்றை வாங்கி அதை படத்தின் கதைக்கு ஏற்ப புதுப்பித்து உள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார் .
இந்தப் படத்தின் கதை 2025 ஆம் ஆண்டு நடப்பதுபோல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நாயகி பானு ரெட்டியை வில்லன் குழுவினர் கடத்தி சென்று விமானத்தில் வைத்திருப்பதாகவும் அங்கு வரும் ஜெய், நாயகியை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தில் 100 ரோபோக்கள் நடித்துள்ளதாகவும், தயாரிப்பாளர் ஒரு ரோபோவை மட்டும் தயாரிக்க முன்வந்துள்ளதாகவும், மீதமுள்ள 99 ரோபோக்களை விஷுவல் எபெக்ட் மூலம் காண்பிக்க இருப்பதாகவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இந்த படத்திற்காக போடப்பட்ட ஒரு கோடி ரூபாய் விமான செட் கதைக்கு ஏற்ப கார்கோ விமானமாக மாற்றி இருப்பதாகவும், அதுமட்டுமின்றி கதையின் சுவாரஸ்யத்தை அதிகரிக்க விமானத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளதாகவும் இந்த விமானம் படத்தின் ஒரு கேரக்டராகவே வருகிறது என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.