பிரா சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு நடிகை பிரியா பவானிசங்கரின் பதிலடி!

பிரா சைஸ் கேட்ட நெட்டிசனுக்கு நடிகை பிரியா பவானிசங்கரின் பதிலடி!

தமிழ் திரையுலகின் பிசியான நடிகைகளில் ஒருவரான பிரியா பவானி சங்கரிடம் நெட்டிசன் ஒருவர் பிரா சைஸ் கேட்டதற்கு அவர் அளித்துள்ள அதிரடி பதில் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர் சமீபத்தில் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ஒரு நெட்டிசன் ’உங்களுடைய பிரா சைஸ் என்ன? என்று கேட்ட கேள்விக்கு ’நான் 34 டி சைஸ் அணிகிறேன் சகோதரா! என்னுடைய மார்பங்களை நான் ஒன்றும் வேற்றுகிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை. உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கும் அவை உள்ளன. நீங்கள் ஒருவேளை அதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் அவர்களின் டி-சர்ட்டுகளை உற்று நோக்குங்கள், அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.

பிரியா பவானி சங்கரின் இந்த பதிலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருவதோடு தரமற்ற கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் தனுஷின் ’திருச்சிற்றம்பலம்’, சிம்புவின் ’பத்து தல’, அருண் விஜய்யின் ‘யானை’, ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ‘ருத்ரன்’ உள்பட சுமார் 10 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES