மாலத்தீவில் குடும்பத்துடன் நடிகை சமீரா ரெட்டி: வைரலாகும் பிகினி வீடியோ!

மாலத்தீவில் குடும்பத்துடன் நடிகை சமீரா ரெட்டி: வைரலாகும் பிகினி வீடியோ!

நடிகை சமீரா ரெட்டி குடும்பத்துடன் மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அவருடைய பிகினி வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ’வாரணம் ஆயிரம்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி. அதன் பிறகு அவர் அஜீத்தின் ’அசல்’ விஷாலின் ’வெடி’ உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார் .

இந்தநிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அக்சய் வர்தே என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட சமீரா ரெட்டிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சமீராரெட்டி சமீபத்தில் தனது குடும்பத்துடன் மாலத்தீவு சென்றார். அங்கு அவர் பிகினி உடையுடன் கூடிய புகைப்படங்கள் வீடியோக்கள் உள்பட பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.

LATEST News

Trending News