சரத்குமாரின் கேரக்டர் இதுவா? 'தளபதி 66' படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல்

சரத்குமாரின் கேரக்டர் இதுவா? 'தளபதி 66' படம் குறித்த ஒரு ஆச்சரிய தகவல்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மேலும் இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார் என்பதும் இந்த படத்தின் பூஜையில் சரத்குமார் கலந்து கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தளபதி 66’ படத்தில் சரத்குமார் கேரக்டர் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த படத்தில் விஜய்யின் தந்தை கேரக்டரில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சரத்குமாருக்கு மூன்று மகன்கள் என்றும் அவர்களில் ஒருவர்தான் விஜய் என்றும் விஜய்யின் இரண்டு அண்ணன்கள் கேரக்டரில் நடிக்க 90களில் பிரபலமான ஹீரோக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்திற்கு தமன் இசை அமைக்கிறார் என்பதும் இந்த படத்தை வம்சி இயக்கி வருகிறார் என்பதும், தில் ராஜுவின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகும் இந்த படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES