பீஸ்ட் ரிலீஸ்.. கதறும் ரஜினி ரசிகர்கள்

பீஸ்ட் ரிலீஸ்.. கதறும் ரஜினி ரசிகர்கள்

விஜய் நடிப்பில் திரையரங்குகளில் இன்று வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வருத்ததுடன் பதிவிட்டு வருகின்றனர்.

பீஸ்ட் ரிலீஸ்.. கதறும் ரஜினி ரசிகர்கள்

பீஸ்ட் - விஜய்

நடிகர் விஜய் 'மாஸ்டர்' திரைப்படத்திற்கு பிறகு நடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. 

 

தலைவர் 169தலைவர் 169

 

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனைவராலும் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியானது. காலை முதலே திரையரங்குகளில் குவிந்த ரசிகர்கள் கட்அவுட் வைத்து மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து மேளம் அடித்து கொண்டாடி வருகின்றனர்.

 

ரஜினி ரசிகர்கள் பதிவு

ரஜினி ரசிகர்கள் பதிவு

 

இருப்பினும் பீஸ்ட் திரைப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதை பார்த்த ரஜினி ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்து நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குகிறார். பீஸ்ட் படத்திற்கு கிடைத்த கலவையான விமரசனங்கள் ரஜினி படத்திற்கும் கிடைக்ககூடாது என்பதற்காக ரசிகர்கள் இதுபோன்று பதிவிட்டு வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES